×

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பெண் பாலியல் புகார், தீய சக்திகளின் தூண்டுதலாக இருக்கலாம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

புதுடெல்லி : உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி, அந்த வழக்கை முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போதையை நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் கோகாய் மீது அவரது அலுவலகத்தில் பணியாற்றிய 35வது மதிக்கத்தக்க பெண் ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி புகார் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி இருந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிந்த உச்ச நீதிமன்றம், அதுகுறித்து விசாரிக்க தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு உள்விவகார விசாரணை குழுவை அமைத்தது. இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக  நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு மேற்கண்ட வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில்,  இந்த பாலியல் புகார் என்பது தீய சக்திகளால் தூண்டி விடப்பட்டு இருக்கலாம் என புலனாய்வு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் புகார் தொடர்பான எந்த ஒரு சரியான ஆதாரத்தையும் குற்றம்சாட்டிய பெண் இதுதொடர்பான வழக்கு முடியும் வரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அதனால் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை முகாந்திரமும் கிடையாது எனக்கூறி, நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைக்கிறது என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Tags : Ranjan Gokhale ,Supreme Court , ரஞ்சன் கோகாய்
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...